

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பிகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்குறுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அறிவித்துள்ளது.
அறிக்கையின் வாக்குறுதிகளின்படி, தேர்தலில் என்டிஏ வெற்றி பெற்றால்:
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி; ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி.
தொழில் தொடங்கும் 75 லட்சம் மகளிருக்கு ரூ. 2 லட்சம் வரை நிதியுதவி.
விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை
5 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும்.
கேஜி முதல் முதுகலை வரையில் தரமான கல்வி இலவசம்.
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள்.
50 லட்சம் பேருக்கு புதிய வீடுகள்.
இலவசமாக ரேசன் பொருள்கள், 125 யூனிட் வரை இலவச மின்சாரம்
பிகாரின் மேலும் 4 நகரங்கள் மெட்ரோ ரயில் சேவைகள்.
2 எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஐஐடி, 10 புதிய தொழிற்துறை பூங்காக்கள், 7 விரைவுச் சாலைகள்.
இந்த அறிவிப்பின்போது, பிகார் முதல்வரும் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்பட லோக் ஜனசக்தி கட்சி, மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.