

பஹல்காம் தாக்குதலின் பதிலடியின்போது, சிறப்பாகப் பணியாற்றிய ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு கேந்திர கிரிமந்திரி தக்ஷதா பதக் விருது அளிக்கப்படவுள்ளது.
காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் மன உறுதியைப் பாராட்டும் வகையிலும் ஆண்டுதோறும் கேந்திர கிரிமந்திரி தக்ஷதா பதக் விருது அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாடு முழுவதுமான காவல்துறையில் ஸ்பெஷல் ஆபரேஷன், விசாரணை, காவல்துறையில் நுண்ணறிவு, தடயவியல் அறிவியல் ஆகிய 4 பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியதாக 1,466 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான பதிலடியில் சிறப்பாகப் பணியாற்றியதாக காஷ்மீர் ஐஜி விதிகுமார் பிர்தி, ஸ்ரீநகர் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சக்ரவர்த்தி உள்பட ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கும் கேந்திர கிரிமந்திரி தக்ஷதா பதக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்தாய் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதியில் கேந்திர கிரிமந்திரி தக்ஷதா பதக் விருது அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.