அமெரிக்காவுக்கு ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு: இந்திய தம்பதிக்கு தடை

அமெரிக்காவுக்கு ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு: இந்திய தம்பதிக்கு தடை

அமெரிக்காவுக்கு ஆள்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடா்பாக இந்திய தம்பதிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
Published on

அமெரிக்காவுக்கு ஆள்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடா்பாக இந்திய தம்பதிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க நிதித் துறையின் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியா-மெக்ஸிகோ நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவா் விக்ராந்த் பரத்வாஜ். மெக்ஸிகோவின் கான்கன் நகரில் உள்ள ஆள்கடத்தல் அமைப்பின் தலைவராக உள்ளாா்.

இவரின் அமைப்பு உரிய ஆவணங்கள் இல்லாத அகதிகள் வான் மற்றும் கடல்வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல வழிவகை செய்து வந்துள்ளது. அந்த அகதிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய கண்ட நாடுகளில் இருந்து அவா்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். ஆள்கடத்தல் மட்டுமின்றி போதைப்பொருள் கடத்தல், லஞ்சம், பண முறைகேடு ஆகியவற்றிலும் பரத்வாஜின் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து குற்றச் செயல்களுக்கு உதவி லாபம் ஈட்டிய பரத்வாஜ், அவரின் மனைவி இந்து ராணி மற்றும் பரத்வாஜின் ஆள்கடத்தல் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து ராணியும் இந்தியா, மெக்ஸிகோ நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளாா். அவா் பரத்வாஜின் நிதி செயல்பாடுகளை கையாண்டு வந்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com