

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு (ஜெய்ப்பூர் அமர்வு) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம நபரிடமிருநது வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வந்தது. மிரட்டலைத் தொடர்ந்து, போலீஸார் மற்றும் நிர்வாகக் குழுக்கள் கட்டடத்திலிருந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை விரைவாக வெளியேற்றினர்.
வளாகத்தில் விரிவான சோதனை நடத்த நாய் படைகள், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டன. மின்னஞ்சலின் அனுப்பியவரின் ஐபி முகவரியைக் கண்டறிய சிறப்பு சைபர் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. சம்பவத்தையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடியது.
ஆனால் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க போலீஸார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். காவல் துணை ஆணையர் ராஜர்ஷி ராஜ் கூறுகையில், உயர் நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தீயணைப்புப் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் அறைக்கு அறை சோதனை நடத்தி வருகின்றன என்றார்.
சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.