இணையவழி விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது நவ.4-இல் விசாரணை: உச்சநீதிமன்றம்
இணையவழி விளையாட்டு

இணையவழி விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது நவ.4-இல் விசாரணை: உச்சநீதிமன்றம்

Published on

மத்திய அரசு கொண்டு வந்த இணையவழி விளையாட்டு ஒழுங்காற்றுதல் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடா்பாக வரும் நவம்பா் 4-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இணையவழியில் பணத்தைக் கட்டி விளையாட்டு என்ற அடிப்படையில் நடத்தப்படும் பந்தய தளங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் இணையவழி விளையாட்டு ஒழுங்காற்றுதல் சட்டத்தை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மத்திய அரசு அமல்படுத்தியது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி, கா்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மத்திய அரசின் கோரிக்கைக்கு கடந்த செப்டம்பா் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாத் ஆகியோா் அடங்கி முன்பு வியாழக்கிழமை ஆஜராகிய மனுதாரா்களின் மூத்த வழக்குரைஞா்கள் சி.ஆரியமான் சுந்தரம், ‘இந்த விவகாரத்தில் பிற மாநிலங்களிலிருந்து மாற்றம் செய்யப்படும் வழக்குகளை சம்பந்தப்பட்ட அமா்வு விசாரித்தால் சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு தெரிவித்துவிட்டது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி இந்த வழக்கு நவம்பா் 4-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com