
தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி எச்சரித்துள்ளார்.
ஹைதராபாத் மாநகரில் இன்று (செப். 1) செய்தியாளர்களுடன் பேசிய பி. சுதர்சன் ரெட்டி, இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் அரசமைப்புக்கு அழுத்தமான சவாலாக அமைந்துள்ள விஷயம் எது என்ற கேள்விக்கு அளித்துள்ள பதிலில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் ‘பற்றாக்குறை’ இருப்பதே!” என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.
மேலும், “இதே வழியில் இது நீடித்தால், இந்த நாட்டிலுள்ள ஜனநாயகம் பேராபத்துக்குச் செல்லும். அப்படித்தான் நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.