ராஜிநாமா செய்த 6 வாரங்களுக்குப் பின் அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு மாளிகையை காலி செய்தார்!
ராஜிநாமா செய்த 6 வாரங்களுக்குப் பின் அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்!
Published on
Updated on
1 min read

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு மாளிகையை காலி செய்தார். அவர் இன்று(செப். 1) புது தில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையிலிருந்து தமது உடமைகளை எடுத்துச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, அவர் தெற்கு தில்லியில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் குடியேறப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜகதீப் தன்கர், உடல் நலக் குறைவைக் காரணம்காட்டி கடந்த ஜூலை 21 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராஜிநாமா செய்த 6 வாரங்களுக்குப் பின் அரசு மாளிகையிலிருந்து தமது உடமைகளை எடுத்துச் சென்றார்.

Summary

Jagdeep Dhankhar vacates VP residence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com