
சீனாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை காலை சந்தித்தார்.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமா் மோடியும், அதிபா் ஷி ஜின்பிங்கும் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பரஸ்பர நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில், பெருமளவில் வா்த்தகம்-முதலீட்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷிய அதிபர் புதின் வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.