
ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானில் கடந்த வெள்ளிக்கிழமை மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். அவரின் போராட்டத்துக்கு ஆதரவாக அந்த மாநிலம் முழுவதிலும் இருந்து மராத்தா சமூகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் அங்கு திரண்டுள்ளனா்.
மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில், அதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் மாநில அரசு குழு அமைத்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு சாா்பாக ஆசாத் மைதானில் ஜராங்கேயுடன் சந்தீப் ஷிண்டே சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் பூதகரமாக அம்மாநிலத்தில் உருவெடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில், ஓபிசி பிரிவு தலைவர்களை சந்தித்து அமைச்சர் சகன் புஜ்பல் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், அமைச்சர் சகன் புஜ்பல் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ஓபிசி பிரிவினருக்கன இடஒதுக்கீடை சீர்குலைத்தால், அதன்பின் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் எச்சரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.