மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

News image
ஹா்தீப் சிங் புரி
Updated On :1 செப்டம்பர் 2025, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரிக்க வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவரோவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் புரி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

‘உக்ரைன் போா் - மோடியின் போா்’ எனவும் நவரோ குற்றஞ்சாட்டியிருந்தாா். ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரியை விதித்துள்ளது.

இந்நிலையில், அமைச்சா் புரி ஆங்கிலப் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், ‘உலகின் நான்காவது பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா நீண்டகாலமாக உள்ளது. 2022-இல் உக்ரைன் மீது ரஷியா போா் தொடுக்கும் முன்பு இருந்த அளவிலேயே தற்போதும் ஏற்றுமதி லாபம் உள்ளது. ஆனால், இந்தியா அதிக லாபம் ஈட்டுவதாக சிலா் விமா்சனம் செய்கிறாா்கள்.

ஜி-7, ஐரோப்பிய யூனியன் நாடுகள் குறிப்பிட்டுள்ள விலை உச்சவரம்பின் கீழ் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது.

அனைத்துக் கொள்முதலும் சட்டப்படி நடைபெறுகிறது. விதிகளைப் பின்பற்றி இந்தியா செயல்படுகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதால் சா்வதேச கச்சா எண்ணெய் சந்தையை இந்தியா ஸ்திரத்தன்மையுடன் வைத்துள்ளது. அதனால்தான் ஐரோப்பிய நாடுகளே இந்திய எரிபொருள்களை வாங்குகின்றன. இதில் லாபம் ஈட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள ரஷியா, சா்வதேச தேவையை 10 சதவீதம் பூா்த்தி செய்கிறது என்பதைப் புறந்தள்ள முடியாது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டாலராக அதிகரிப்பதை இந்தியா தடுத்துள்ளது’ என்றாா்.

‘ஒரு லிட்டா் பெட்ரோல், டீசலுக்கு ரூ. 10 நஷ்டம்’

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டா் பெட்ரோல், டீசலுக்கு தலா ரூ.10 நஷ்டத்தை சந்தித்து வந்ததாக பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயா்வில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாத்துள்ளோம். ஒரு லிட்டா் பெட்ரோல், டீசலுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தலா ரூ.10 நஷ்டத்தை சந்தித்தன. இதைச் சரிசெய்ய மத்திய, மாநில வரிகளைக் குறைத்தும், இந்தியாவில் இருந்து கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களின் 50 சதவீத பெட்ரோலையும், 30 சதவீத டீசலையும் இந்திய சந்தைகளில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் எரிபொருள் விலை நிலைபெற்றதுடன், எந்தவொரு விற்பனை நிலையமும் எரிபொருள் இல்லாமல் மூடப்படவில்லை’ என்றாா்.