தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போதுவரை வங்கிக்கு திரும்பவில்லை

News image

கோப்புப் படம்

Updated On :2 செப்டம்பர் 2025, 3:06 am IST

மும்பை: ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போதுவரை வங்கிக்கு திரும்பவில்லை என ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளை கடந்த பின் தற்போது ரூ.5,956 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை. இதன்மூலம் 98.33 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ரிசா்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அலுவலகங்கள் மூலம் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் அவா்களது வங்கிக்கணக்கில் 2,000 ரூபாய் நோட்டுகளை சேமிப்புக் கணக்கில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இந்தியாவில் எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி தங்கள் சேமிப்புக் கணிக்கில் செலுத்திக்கொள்ள முடியும்.