பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள்

வாரத்தின் முதல்நாள்: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

வாரத்தின் முதல்நாளில், பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின.
Published on

இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் இரண்டும் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை உயர்வுடன் தொடங்கின.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி50, 24,500 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தைத் தொடங்கியது.

இன்று காலை 9.22 மணியளவில் நிஃப்டி50 குறியீடு 92 புள்ளிகள் உயர்ந்து 24,518.50 என்ற அளவிலும், சென்செக்ஸ் 80,113.43 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமானது. இது 304 புள்ளிகள் அதிகம்.

பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதால், இந்த வாரம் சந்தை நிலவரங்கள் உயர்வுடன் காணப்படும் என்று சந்தை நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒருபக்கம், அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு சட்டப்படி தவறானது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, அடுத்து, நாட்டின் முதல் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சியானது 7. 8 சதவீதமாக இருப்பது, கணித்ததைவிடவும் சற்று நல்ல எண்ணிக்கை போன்றவை சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com