
ஏற்கனவே மழை, வெள்ளத்தால் திணறி வரும் வட இந்திய மாநிலங்களுக்கு அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பஞ்சாப், ஹிமாசல், உத்தரகண்ட் மாநிலங்களுக்கு திங்கள்கிழமை இந்திய வானிலை ஆய்வு மையம் மிகக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் மலை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலச்சரிவுகள் நேரிடலாம் என்றும் தாழ்வானப் பகுதிகள் மட்டுமல்லாமல் பரவலாக வெள்ளம் சூழலாம் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசுகையில், மாநிலத்துக்கு அடுத்த 24 - 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது. வீடுகள் இடிந்தவர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
ஹிமாசலில், சம்பா மற்றும் ஷிம்லாவில் இயற்கைப் பேரிடர்களும் நேரிட்டுள்ளன. மணிமகேஷ் யாத்திரைக்கு வந்த 16 பக்தர்கள் பலியாகினர். வானிலை மோசமாக இருந்ததால், யாத்திரை நிறுத்தப்பட்டது. 1500 பக்தர்கள் பாதி வழியில் தவித்து வருகிறார்கள்.
பருவமழைத் தொடங்கியதிலிருந்து மேக வெடிப்பு காரணமாக ஹிமாசலில் சுமார் 300 பேர் பலியாகினர். தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 819 சாலைகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.