பறவை மோதல்: நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

பறவை மோதியதால் நாக்பூரில் அவசர தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அவதி..
IndiGo flights
இண்டிகோ விமானம்
Published on
Updated on
1 min read

நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட விமானம் பறவை மோதியதில் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு 165 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் மீது பறவைகள் மோதின.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

அதன்பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பயணிகளை மாற்று விமானம் மூலம் கொல்கத்தாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

A Nagpur-Kolkata IndiGo flight returned to the airport here following a suspected bird hit after take-off on Tuesday morning, a senior airport official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com