
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 20 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.
மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் பட்டாலியன் எண்.1 மாவோயிஸ்டுகளின் வலியான ராணுவ அமைப்பாகக் கருதப்பட்டவர்கள். இந்த நிலையில் 9 பெண்கள் உள்பட 20 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தடைந்தனர்.
அப்பாவி பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்துதல், தடை செய்யப்பட்ட அமைப்பிற்குள் வளர்ந்துவரும் உள்வேறுபாடுகள் ஆகியவற்றில் ஏமாற்றம் அடைந்ததால் மூத்த காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் அதிகாரிகள் முன் சரணடைந்தனர் என்று காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறினார்.
ஷர்மிளா என்ற உய்கா (25), டாட்டி கோசி என்ற பர்மிளா(20) ஆகியோருக்கு ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது. கேடர் முச்சாகி ஹித்மா (54), பகுதி குழு உறுப்பினர் தலா ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது. மற்ற நான்கு கேடர்களுக்கு தலா ரூ.4 லட்சமும், மேலும் பலருக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது.
சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் தலா ரூ.50,000 உதவி வழங்கப்பட்டது, மேலும் அரசின் கொள்கையின்படி அவர்கள் மறுவாழ்வு பெறுவார்கள். மேலும்
சட்டவிரோத மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய அனைவரும் வன்முறையைக் கைவிட வேண்டும், அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு வாழ்க்கை மற்றும் வசதிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.