
சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மாநில காவல் துறையினர், நேற்று (செப்.2) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த 5 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக, இன்று (செப்.3) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், கைதானவர்களில் ஒருவர் ஏற்கெனவே ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிகுண்டுகளும், வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கைது செய்யப்பட்ட நக்சல்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.