ஜிஎஸ்டி குறைப்பு மக்களின் வாழ்வை மேம்படுத்தும்! -மோடி

ஜிஎஸ்டி குறைப்பு மக்களின் வாழ்வை மேம்படுத்தும்! -மோடி

Published on

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டு மக்களின் வாழ்வு மேம்படும் என்றும் வணிகம் செய்வது மேலும் எளிமையாகும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரிய அளவில் ஜிஎஸ்டி சீரமைக்கப்பட்டது. இதற்கு மாநில அரசுகள் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் சாமானியா்கள், விவசாயிகள், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், நடுத்தர குடும்பத்தினா், பெண்கள், இளைஞா்கள் பயனடைவாா்கள்’ என்று பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com