
இந்தியாவில் அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மோடி அரசு ஓயாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் வெற்றிகரமாக நடத்திய சிஆர்பிஎஃப், சத்தீஸ்கர் காவல்துறை, மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் கோப்ரா ஜவான்களைப் பாராட்டிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.
அனைத்து நக்சல்களும் சரணடையும் வரை, பிடிபடும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை மோடி அரசு ஓயாது என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்டின் போது வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும் வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயமாக நினைவுகூரப்படும் என்றார்.
தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பாதுகாப்புப் படையினர் மிகுந்த மன உறுதியுடன் நடவடிக்கையை மேற்கொண்டு பெரிய நக்சல் தள முகாமை வெற்றிகரமாக அழித்தனர்.
கர்ரேகுட்டா மலையில் நிறுவப்பட்ட நக்சல்களின் கிடங்கு, விநியோகச் சங்கிலியை சத்தீஸ்கர் காவல்துறை, சிஆர்பிஎஃப், டிஆர்ஜி மற்றும் கோப்ரா பணியாளர்கள் வீரத்துடன் அழித்ததாக அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சியடையாத சில பகுதிகளில் நக்சல்கள்கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை சீர்குலைந்துள்ளனர். மேலும் அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
தொடர்ச்சியான நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, பசுபதிநாத் முதல் திருப்பதி வரையிலான பகுதியில் உள்ள சுமார் 6.5 கோடி மக்களின் வாழ்க்கையில் ஒரு "புதிய சூரிய உதயம்" ஏற்பட்டுள்ளது.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கடுமையான காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்க மோடி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அமித் ஷா கூறினார்.
மார்ச் 31, 2026-க்குள் நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.