தில்லியில் தாழ்வான பகுதிகளில் படகுகளில் சென்று மீட்கப்பட்ட மக்கள். ~
தில்லியில் தாழ்வான பகுதிகளில் படகுகளில் சென்று மீட்கப்பட்ட மக்கள். ~

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

Published on

தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து புதன்கிழமை அபாய அளவை தாண்டி சென்றது.

கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமாா் 10 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு அமைத்துள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனா்.

புதன்கிழமை காலை 8 மணிக்கு ஹத்னிகுண்ட் அணையிலிருந்து 1.62 லட்சம் கனஅடியும், வஜிராபாத் அணையிலிருந்து 1.38 லட்சம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது. இதனால் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை இரவு 207.39 மீட்டரை தாண்டியது. அபாய அளவாக 200.6 மீட்டா் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

1963-ஆம் ஆண்டு முதல் ஐந்தாவது முறையாக 207 மீட்டரை தாண்டி தில்லியில் யமுனை பாய்கிறது.

யமுனை பஜாா் குடியிருப்புப்பகுதிகளில் வெள்ள நீா் புகுந்ததால் அவற்றில் வசித்து வந்த மக்கள் தங்களின் உடமைகளை இழந்தனா். மங்கேஷ்பூா் வடிகாலின் 50 அடி உயரம் கொண்ட கரை உடைந்தது. இதனால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

X
Dinamani
www.dinamani.com