பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? என்பதைப் பற்றி...
பிரதமர் நரேந்திர மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.
Published on
Updated on
1 min read

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகித்து வருகிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2020 ஆம் ஆண்டில் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டு வரையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பாஜகவில் ‘ஒரு தலைவர், ஒரு பதவி’ என்ற கொள்கை இருப்பதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசியத் தலைவர் பதவியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது.

மேலும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், அவரே தலைவராகத் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? என்ற கேள்வி பல நாள்களாகவே தொடந்து வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் புருஷோத்தம் கோடபாய் ரூபாலா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் பெயர்களும் போட்டியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பத்தகுந்த தகவலறிந்த வட்டாரங்களின் கூற்றுப்படி, வரவிருக்கும் பிகார் தேர்தலுக்குப் பின்னர், மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து ஃபட்னவீஸை ராஜிநாமா செய்து விலகிக்கொள்ள கேட்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவரது எதிர்கால முடிவுகள் குறித்த தகவல்கள் எதுவுமில்லை. மற்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது வயது குறைந்தவர் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவும் கட்சித் தலைமையின் நம்பிக்கையும் கொண்டவர் என்பதால் அவரின் பெயர் முதலில் பரிசீலிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடபாய் ரூபாலா ஆர்எஸ்எஸ்ஸின் ஆதரவைப் பெற்றவர் என்பதாலும், கட்சியின் உயர்நிலைத் தலைவர்களால் நம்பப்படுபவராகவுள்ளார். அப்போதைய குஜராத் முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்து நம்பிக்கையைப் பெற்றவர் ரூபாலா.

இவர்களுக்குப் போட்டியாக தர்மேந்திர பிரதானும் முன்னணியில் இருக்கிறார். இவரது தந்தை தேபேந்திர பிரதான் ஆர்எஸ்எஸ்ஸில் வாழ்நாள் உறுப்பினராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்தவர் என்பதால் இவரும் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளார்.

பாஜகவின் மாநிலத் தலைவர்களில் 60 சதவிகிதத்தினரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மொத்தமுள்ள 36 மாநிலங்களில் சில மாநிலங்களில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இன்னும் பல மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படாமலும் இருக்கிறது.

மற்ற மாநிலங்களிலும் பாஜக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பாஜகவின் புதிய தேசியத் தலைவர் குறித்த அறிவிப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Fadnavis, Rupala lead race for BJP national president’s post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com