ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி பேச்சு!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் மோடி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் குறித்து உரையாடினார்.

இந்த உரையாடலின்போது வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரவேற்கப்பட்டன. இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதற்கும், இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தைச் (IMEC) செயல்படுத்துவதற்கும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும், உக்ரைன் போரால் உலகளாவிய போர் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையில் பாதிப்படைந்ததாகக் கூறிய வான் டெர், உக்ரைனுடனான இந்தியாவின் தொடர் நிலைப்பாட்டையும் வரவேற்றார். அதுமட்டுமின்றி, ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், அமைதியை நோக்கிய பாதையை உருவாக்க உதவுவதில் இந்தியாவின் முக்கிய பங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்கு இரு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த மாநாடு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

PM Modi, EU leaders push for early FTA, discuss Ukraine conflict

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com