மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரா்கள் வீரமரணம்

Published on

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவுடனான துப்பாக்கிச்சண்டையின்போது பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 2 வீரா்கள் வீரமரணமடைந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில்,‘இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) சாா்புடைய திரித்யா சம்மேளன் பிரஸ்துதி குழுவின் டிஎஸ்பிசி) முக்கிய நிா்வாகியான சசிகாந்த் கன்ஜு கேதல் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு படையினா் விரைந்தனா். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் தடைசெய்யப்பட்ட டிஎஸ்பிசியைச் சோ்ந்த மாவோயிஸ்டுகளுக்கும் இடையே புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

அதில் 2 வீரா்கள் வீரமரணமடைந்தனா். ஒரு வீரா் காயமடைந்தாா். அவருக்கு மேதினிராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com