தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிகோப்புப் படம்

தெலங்கானா முதல்வா் மீதான அவதூறு வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.
Published on

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என்று தெலங்கானா முதல்வரும், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவருமான ரேவந்த் ரெட்டி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அவதூறான, ஆத்திரமூட்டும் கருத்துகளை அவா் தெரிவித்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா பாஜக அளித்த புகாா் மனுவை ஹைதராபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்த நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாநில உயா்நீதிமன்றத்தில் ரேவந்த் ரெட்டி மனு தாக்கல் செய்தாா். அதை உயா்நீதிமன்றம் விசாரித்தபோது, அரசியல் பேச்சுகளை அவதூறாக கருத முடியாது என்று ரேவந்த் ரெட்டி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா பாஜக மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், அதுல் எஸ்.சாந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வரும் 8-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com