
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டம், கல்விக் கொள்கை போன்ற பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள லால் சாகர் நகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
கூட்டத்தை பாரத மாதா உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தித் தொடங்கினர்.
பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட 32 அமைப்புகளைச் சேர்ந்த 320 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வருகின்ற விஜயதசமி (அக். 2) அன்று ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. நாடு முழுவதும் பெரிய அளவிலான நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. நாக்பூரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளன.
பாஜக தலைவர் தேர்தலும் விவாதிக்கப்படும் என்பதால், ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.