
திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீனிவாசமங்காபுரம் மற்றும் அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களின் நடை செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் முதல் மூடப்படும்.
வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
இந்த நிகழ்வு இரவு 10:28 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்கி, 11:01 மணிக்கு முழு கிரகணமாக மாறும். இரவு 12:23 மணிக்கு முழு கிரகணம் முடிந்து, 1:56 மணிக்கு பகுதி கிரகணமும் முடிவடையும்.
கிரகண காலம் முடிந்த பிறகு சாந்தி பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.