
புது தில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று(செப். 6) சந்தித்துப் பேசினர்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆகஸ்ட்டில் ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதனைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கிய இந்திய தேர்தல் ஆணையம், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதனிடையே, சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை(ஆக. 31) தொடங்கி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீா்மானித்தனா்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இன்றைய சந்திப்பின்போது, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.