
குஜராத்தில் கடல் மட்டத்திலிருந்து 2,600 அடி உயரத்தில் அமைந்துள்ள பாவாகத் மலைக் கோயிலில் ரோப்காரின் கேபிள் அறுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 2,000 படிகள் கொண்ட இம்மலைக் கோயிலுக்கு பக்தர்கள் நடந்து சென்றும், நடக்க இயலாதவர்கள் ரோப்கார் மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மலை உச்சியிலுள்ள காளி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இரண்டு வழித்தடங்களில் ரோப்கார்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பொருள்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் ரோப்காரில் மலைக்கோயிலிருந்து கீழே சென்றுகொண்டிருந்த பணியாளர்கள் 6 பேர், நடுவழியில் கேபிள் அறுந்ததால் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
அங்குள்ள முதலாம் எண் கோபரத்தின் அருகே இன்று(செப். 6) மாலை 3 மணிளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோர விபத்தில் சிக்கி மாய்த்த பணியாளர்களின் உடல்களை காவல் துறையினரும் தீயணைப்புப்படையினரும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கேபிள் அறுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.