
மத்தியப் பிரதேசத்தில் போலீஸார் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவரின் சடம் மீட்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு மூன்று போலீஸாரை ஏற்றிச் சென்ற கார் சனிக்கிழமை பாலத்தில் இருந்து சறுக்கி க்ஷிப்ரா ஆற்றில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அசோக் சர்மாவின் உடல் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற இருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருள் சூழ்ந்ததால் அதிகாலை 2.30 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ஊர்க்காவல் படையினர் படகுகள், ட்ரோன்கள் மற்றும் டைவர்ஸுடன் இருவரையும் தேடி வருகின்றனர்.
உன்ஹெல் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார், காணாமல் போன பெண்ணின் வழக்கை விசாரிக்கச் சென்றபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.