
இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடைகிறது.
கிட்டத்தட்ட 82 நிமிஷங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. திங்கள்கிழமை அதிகாலை 12.23 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது.
இந்த முழு சந்திர கிரகணத்தின்போது நிலா அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலும், இதேபோன்ற சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அண்ணா அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த சந்திர கிரகணத்தை வீட்டிலிருந்தே பொதுமக்கள் வெறும் கண்களாலும் பாா்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனா்.
முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க மக்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளதையடுத்து, நாடெங்கிலும் பல்வேறு இடங்களிலும் மக்கள் தொலைநோக்கி வழியாக நிலவைப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இன்றிரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.