
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நாளை(செப்.9) நிகழவுள்ள நிலையில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தேசிய தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 2027, ஆக.10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தலைவர்கள் அனைவரும் தில்லிக்குப் படையெடுத்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் தில்லிக்கு விமானத்தில் சென்ற ஒரு நாள் கழித்து, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியும் இன்று தேசிய தலைநகருக்குப் புறப்பட்டார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க, ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பிக்களுடன் அவர் சந்திப்பை நடத்தலாம் எறு வட்டாரங்கள் தெரிவித்தன. செவ்வாய்க்கிழமை அவர் ஒடிசாவுக்குத் திரும்ப உள்ளார்.
தேசிய தலைநகரில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 5 ஆம் தேதி ஒடிசா திரும்பிய நிலையில், மீண்டும் அவர் தில்லிக்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் தேசிய தலைநகரில் உள்ள பாலசோர் எம்பி பிரதாப் சாரங்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், மோகன் சரண் மாஜி நேரடியாக சாரங்கியின் இல்லத்திற்குச் செல்வதாகத் தகவல்கள் தெரிவித்தன.
முதல்வரைத் தவிர, ஒடிசா பாஜக தலைவர் மன்மோகன் சமல், கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் விஜய் பால் சிங் தோமர் மற்றும் பிற மூத்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.