
வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவையைப் பாராட்டி பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சட்லெஜ், பியாஸ், ராவி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பஞ்சாபில் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.
பஞ்சாப் மட்டுமில்லாது வட மாநிலங்களான ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளில் முன்களத்தில் நின்று சேவையாற்றி வரும் ராணுவத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நன்றியும் பாராட்டும் குவிகிறது.
கடந்த ஏப்ரல்முதல், இந்திய ராணுவம் நாடெங்கிலும் 75 இடங்களில் மீட்ப்புப் பணிகளில் ஈடுபட்டு அப்பகுதிகளில் 21,500க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. சுமார் 10,000 மக்களுக்கு மருத்துவ உதவியும் 23,500 கிலோவுக்கும் அதிகமான நிவாரணப் பொருள்களும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள பஞ்சாபில் மட்டும், 10,000 பேர் ராணுவ உதவியுடன் மீட்கபட்டுள்ளனர். மேலும், தரை வழியாக தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கும் ராணுவத்தின் 250 மணி நேரத்தும் மேல் நீடித்த ஹெலிகாப்டர் சேவையால் பல பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.