
குடியரசு துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படுவார் என்று மக்கள் நம்பிக்கை பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை(செப்டம்பர் 9) நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக தரப்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் இந்தியா கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களை இன்று(செப். 8) மாலை புது தில்லியில் சந்தித்துப் பேசினார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தில்லியில், தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தின் எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். சி. பி . ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளரக அறிவிக்கப்பட்டதற்கு பரவலாக உற்சாகமும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
அவர் ஒரு சிறந்த குடியரசு துணைத் தலைவராகச் செயல்படுவார் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அப்பதவியை தமது ஞானம் மற்றும் உள்ளீடுகளால் ஜொலிக்கச் செய்வார்” என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலை, பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.