குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் இன்று(செப். 8) மாலை கலந்துரையாடுகிறார்.
நாட்டில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை(செப்டம்பர் 9) நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக தரப்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாஜக எம்.பி.க்களுக்கான 2 நாள் கூட்டம் தில்லியில் நேற்றும் இன்றும்(செப் 7, 8) நடைபெறுகிறது. நேற்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. பாஜக அரசின் சாதனைகள் பற்றி பிரதமர் மோடி கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து இன்றும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 4 மணியளவில் நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்றும்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு முறை குறித்து கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி பேசவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.