
பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலையின் நூலகத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது, மாத ஊதியாக ரூ.1.2 லட்சம் வாங்கிக் கொண்டிருந்த பிரஜ்வலுக்கு தற்போது நாளுக்கு ரூ. 525 மட்டுமே வழங்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து, எம்எல்ஏ, எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், பாலியல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை நூலகத்தின் எழுத்தாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். வாரத்தில் ஆறு நாள்கள், நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் பணியாற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். வேலைக்கு வரும் நாள்களுக்கு மட்டுமே பிரஜ்வலுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு வழங்கப்படும் ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதனைக் கொண்டு சிறைக்குள் பொருள்கள் வாங்க அனுமதி உண்டு அல்லது குடும்பத்தினருக்கு அனுப்பலாம்.
மேலும், பிரஜ்வலுக்கு எதிரான மூன்று வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.