கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினர் உரிமைகளை நசுக்கும் சாகசம்! ராகுல்

கிரேட் நிகோபார் திட்டத்தை விமர்சித்துள்ள ராகுல் காந்தி...
ராகுல் காந்தி
ராகுல் காந்திPTI
Published on
Updated on
1 min read

கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் சாகசம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.

அந்தமான் - நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான் - நிகோபாா் தீவுகளின் ஒருங்கிணைந்த வளா்ச்சி கழகம் மேற்கொள்ள உள்ளது.

இந்த திட்டத்தால் நிகோபார் தீவு மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படவிருக்கும் பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி எழுதியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி, ”கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் தவறான சாகசம், சட்ட செயல்முறையைக் கேலி செய்யும் செயலாகும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்ட பதிவில், ”நாட்டின் சுற்றுச்சூழல் ரத்தினமான நிகோபார் தீவு, லாபத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் சிதைக்கப்படுகிறது. காடுகளையும் பழங்குடியினரையும் வேரோடு அழித்து, உலகின் வளம்மிக்க பொக்கிஷங்களில் ஒன்றை தரிசு நிலமாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தும் அறிவியலுக்கு புறம்பான சுற்றுச்சூழல் பேரழிவுத் த்ட்டத்தை மோடி அரசு செயல்படுத்துகிறது. இவை அனைத்தும் குறுகிய கால ஆதாயத்துகாக செயல்படுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிரேட் நிகோபார் திட்டம்

கிரேட் நிகோபார் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபாரில் துறைமுகம், சா்வதேச விமான நிலையம், சிறு நகா்ப்பகுதி, 160 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதற்காகப் பயன்படுத்த உள்ள நிலத்தில் நிகோபாரீஸ், ஷோம்பென்ஸ் ஆகிய பழங்குடியின மக்கள் வாழும் சுமாா் 130 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பழைமையான காடும் அடங்கும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கிரேட் நிகோபாா் தீவில் உள்ள பூா்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்றும், முக்கிய சூழலியல் மண்டலங்களுக்கு சேதம் ஏற்படக் கூடும் என்றும் விஞ்ஞானிகள், பழங்குடியினா் உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் விமா்சித்துள்ளனா்.

இந்தத் திட்டத்துக்காக அங்குள்ள புலிகள் காப்பகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள கிராம மக்களை துரிதமாக இடம் மாற்ற தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்ட உத்தரவும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Summary

The Great Nicobar Island Project is a misadventure - Rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com