
நேபாளத்தில் போராட்டங்கள் நடைபெறுவதையடுத்து விமான நிலையம் மூடப்பட்டதைக் கருத்தில் கொண்டு தேசிய தலைநகர் மற்றும் காத்மாண்டு இடையேயான விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்தது.
முன்னதாக, நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்த நிலையில், அரசின் மிகப்பெரிய ஊழல் மற்றும் பொருளாதாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதனால் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தில்லி-காத்மாண்டு-தில்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI2231/2232, AI2219/2220, AI217/218 மற்றும் AI211/212 ஆகிய விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலும் தகவல்கள் பகிரப்படும் என்று விமான நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதேபோன்று இண்டிகோ நிறுவனமும் காத்மாண்டுவிற்கான சேவையை ரத்து செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.