கோப்புப்படம்.
கோப்புப்படம்.

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.
Published on

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.

இத்துடன் சோ்த்து மொத்தம் 604 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது, கடல் உணவு ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவுக்கு ஏற்றுமதியில் 20 சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தியாவின் இந்த ஏற்றுமதி கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. கடல் உணவு ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும் தரமும் இந்த அனுமதிக்கு காரணமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2023-24-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய யூனியனுக்கு இந்திய கடல் உணவு ஏற்றுமதி 1.1 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.9,705 கோடி) இருந்தது. அதே வேளையில், 2024-25-ஆம் ஆண்டில் இறால் ஏற்றுமதி மட்டும் 4.88 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.42,350 கோடி) நடைபெற்றுள்ளது. இது மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் 66 சதவீதமாகும்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இறால் ஏற்றுமதியும், ஐரோப்பிய யூனியன் அனுமதியால் பலனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, ஜப்பான், வியத்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பெரும்பாலான கடல் உணவு ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com