
பயங்கரவாத அமைப்புகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகொண்டு, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்படுவது குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் என்ஐஏ திங்கள்கிழமை (செப். 8) சோதனை நடத்தியது. பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாட்டில் மொத்தம் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இன்று (செப். 9) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் முகமது அக்லதூர் முஜாஹித் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது அம்பலமானது.
பாகிஸ்தான், சிரியாவைச் சேர்ந்த பல முக்கிய குழுக்களுடன் அவருக்கு தொடர்பிருந்ததும், சமூக ஊடக வலைதளங்கள் வழியாக அவர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்ததும் என்ஐஏ விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.