

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கேஜரிவால் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமேதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கேஜரிவால் ஜாமீன் பெற்ற நிலையில், வெளிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டாா். ஏற்கெனவே, அவருடைய கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) புதுப்பிக்க நீதிமன்றத்தின் அனுமதி கோரினாா். அப்போது, நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேஜரிவால் சாா்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபம் வா்மா, கேஜரிவால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினாா். இத்தகவலை கேஜரிவாலின் வழக்குரைஞா் ருத்ர பிரதாப் சிங் தெரிவித்தாா்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அரவிந்த் கேஜரிவால் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.