பிரதமர் மோடிகோப்புப் படம்
இந்தியா
நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்
நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.
நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்தில் நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இளைஞா்கள் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, வளமை, அமைதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, நேபாள நாட்டு சகோதர, சகோதரிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.