
சிறையில் சூரிய ஒளியைக்கூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இருந்து விடியோ அழைப்பின் மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதியிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் தர்ஷன், அவரது ரசிகர் ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கூடுதல் போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறையில் வழங்கக் கோரி தர்ஷன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் விசாரித்த நிலையில், தர்ஷன் விடியோ அழைப்பின் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ”தன்னை கடந்த 30 நாள்களாக சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிக்கவில்லை, எனது உடைகள் துர்நாற்றம் வீசுகிறது, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுங்கள்” என்று நீதிபதியிடம் தர்ஷன் கதறி அழுதுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறையின் விதிமுறைக்குள்பட்டு கூடுதல் போர்வை மற்றும் தலையணை வழங்க சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சிறை வளாகத்துக்குள் நடப்பதற்கு தர்ஷனுக்கு அனுமதி வழங்க வேண்டும், உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவரை அணுக அனுமதிக்க வேண்டும் மற்றும் அவரின் பணத்தின் சிறை கேண்டீனில் சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, வேறு சிறைச்சாலைக்கு மாற்றக் கோரிய தர்ஷன் தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.