
10 லட்சம் (1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாய்கள் கணக்கெடுப்பு, அவற்றுக்கு உணவு வழங்குவதை நெறிப்படுத்துதல் தொடர்பாகவும் சட்ட்விரோதமாக உரிய உரிமமைன்றி வளர்ப்பு பிராணிகள் கடைகளை விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் புதன்கிழமை(செப். 10) நடத்தப்பட்ட ஆலோசனையில் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தேசிய தலைநகரில் தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்திருந்த நிலையில், அதற்கான செயல்திட்ட முறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தில்லி தலைமைச் செயலகத்தில் விலங்குகள் நல வரியம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், வெறிநாய்க்கடிக்கு தீர்வு காணப்படுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
நாய்களுக்கு சிப்கள் (சில்லுகள்) பொருத்தி கண்காணித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அதனை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய நவடிக்கைகல் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குச் சந்தைகளில் நடமாட்டத்தை கண்காணிக்க விலங்குச் சந்தை கண்காணிப்புக் குழுவும் அமைக்கபடவுள்ளது.
வெகுவிரைவில் இந்த நடவடிக்கைகள் அமலாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.