
ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு பிகார் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்களுடன் கூடுதலாக ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாகக் கருதப்படும் என்று கூறியது. மேலும், ஆதார் சட்டத்தின் பிரிவு 9 இன் படி, ஆதார் அட்டை அடையாள சான்றாக பயன்படுத்தப்பட வேண்டும், குடியுரிமையின் சான்றாக அல்ல என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது.
அதுமட்டுமின்றி, இந்த உத்தரவுக்கு இணங்காமல், ஆதார் அட்டையை ஏற்காமலோ மறுத்தாலோ அது மிகவும் தீவிரமாகக் கருதப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்தது.
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களின் அடையாளச் சான்றாக ஆதார் அட்டை சேர்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமையில் உத்தரவிட்டது. மேலும், இதனை அடுத்த நாளிலேயே அமல்படுத்தவும் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.