
மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம் வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசு தனது புதிய வரைவு மின்சார வாகனக் கொள்கை - 2025இன் கீழ் இந்தி விதியை இணைத்துள்ளது. இது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு ஐந்தாண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
வரைவுக் கொள்கையின்படி, ஒடிசாவில் மின்சார இருசக்கர வாகனப் பதிவுக்கு ஒரு கிலோவாட் பேட்டரி திறனுக்கு ரூ. 5 ஆயிரம் என்ற விகிதத்தில், அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்க உள்ளது.
முன்னதாக மின்சார வாகனங்களுக்கு அதிகபட்ச மானியத்தொகை ரூ. 20 ஆயிரமாக இருந்தது.
அதிக பேட்டரி திறன் கொண்டு மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தற்போது அதற்கேற்ப மானியத் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இருசக்கர வாகனங்களைத் தவிர, பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டாக்சிக்கள், லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கும் அரசு மானியங்களை வழங்குகிறது.
2030 வரை அமலில் இருக்கும் கொள்கையின் கீழ், நான்கு சக்கர இலகுரக மோட்டர் வாகனங்கள் அல்லது டாக்சிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் 3.5 டன்களுக்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கும் 7 டன்னுக்கு குறைவான எடையுள்ள வாகனங்களுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோன்று 12 டன் முதல் 18.5 வரையிலான வாகனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் ஒடிசாவில் நிரந்தரமாக வசிக்கும் தனிநபர்களுக்கும் மின்சார வாகன சலுகைகள் வழங்கப்படும்.
மின்சார வாகனத் துறையை மேம்படுத்துவதற்காக அரசு புதிய கொள்கையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முன்மொழியப்பட்ட கொள்கையின் கீழ், 2030 ஆம் ஆண்டிற்குள் புதிய பதிவுகளில் 50 சதவிகிதம் மின்சார வாகனங்களை உருவாக்க வேண்டும் என்று அரசு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.