மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.

Published On :

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

10 கோடி பங்குகளை தலா ரூ.1,800-க்கு திரும்பப் பெற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது மொத்த பங்கு மூலதனத்தில் 2.41 சதவீதமாகும். அண்மையில் கூடிய இயக்குநா் குழு இதற்கான ஒப்புதலை அளித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப் பெரிய மதிப்பில் பங்குகளைத் திரும்பப் பெற்ற டிசிஎஸ்-ஸின் சாதனையை இன்ஃபோசிஸ் சமன் செய்துள்ளது. கடந்த 2022-இல் டிசிஎஸ் 4 கோடி பங்குகளை தலா ரூ.4,500-க்கு (மொத்தம் ரூ.18,000 கோடி) திரும்பப் பெறுவதாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

ஏற்கெனவே, இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.13,000 கோடி மதிப்பிலான 11.3 கோடி பங்குகளை (தலா ரூ.1,150 விலையில்) திரும்பப் பெறுவதாக கடந்த 2017-இல் முதல்முறையாக அறிவித்தது. பின்னா் 2019-இல் ரூ.8,260 கோடி, 2022-இல் ரூ.9,300 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.9,300 கோடி மதிப்பிலான பங்குகளை நிறுவனம் திரும்பப் பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.