
மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராமகூலம் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவா் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசிக்குப் புதன்கிழமை மாலை வந்தாா். வாரணாசியில் பிரதமர் மோடியுடன் அவா் வியாழக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மோரீஷஸ் பிரதமர் தனது மனைவி வீனா ராம்கூலத்துடன் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, கோயில் கட்டுமானம் குறித்தும் கேட்டறிந்தார். மோரீஷஸ் அதிகாரிகள் அடங்டிகய 30 பேர் கொண்டு குழு அவருடன் வந்தனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகைதந்த பிரதமர் ராம்கூலத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். மோரீஷஸ் பிரதமரை வரவேற்க விமான நிலையத்திலிருந்து ராமர் கோயிலுக்குச் செல்லும் பாதை வரை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மோரீஷஸ் பிரதமரை வரவேற்கும் வகையில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளும் வழிநெடுக ஒட்டப்பட்டிருந்தன.
முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் ராமகூலத்தை வரவேற்க உத்தரப் பிரதேச அமைச்சரவை அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி மற்றும் உள்ளூர் மக்கள் திரண்டனர்.
பிரதமர் ராமகூலம் முன்னதாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றார். மோரீஷியஸ் பிரதமர்செப். 9 முதல் 16 வரை இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வருகை தந்துள்ளார்.
இதையும் படிக்க: வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.