
வடகிழக்கு மாநிலம் தொழில்முனைவோருக்கான முக்கிய மையமாக மாறுகிறது; 4,500 புத்தாக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று மிசோரமில் பிரதமர் மோடி கூறினார்.
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
மூன்று நாள்கள் பயணத்தில் முதல்கட்டமாக வடகிழக்கு மாநிலமான மிசோரம் வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.9,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தலைநகர் ஐஸாவில் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது, நடப்பு, 2025-26 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நமது நாட்டின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடு என்பதே.
மக்களின் குடும்ப வாழ்க்கையை எளிதாக்குவதற்காக, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி, அத்தியாவசிய பொருள்களின் மீதான வரிகளைக் குறைப்பதில் சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறது.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்றுமதியிலும் வளர்ச்சியையும் கண்டு வருகிறோம். ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களுக்கு நமது வீரர்கள் எவ்வாறு பாடம் கற்பித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவருமே பார்த்தீர்கள்.
நமது ஆயுதப் படைகள் குறித்து ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பெருமித உணர்வால் நிறைந்திருந்தனர். இந்த ஆபரேஷனில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நமது நாட்டைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றின.
நமது பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு குடிமகனின், ஒவ்வொரு குடும்பத்தின் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது.
மக்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம்தான் வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கறோம். எனவே இந்தப் பயணத்தில், மிசோரம் மக்கள் மிக முக்கியமான பங்கை வகிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் கூறினார்.
இதையும் படிக்க... முதல் பிரசாரம்: திருச்சியில் தவெக தலைவர் விஜய்! குவிந்த தொண்டர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.