ஜிஎஸ்டி குறைப்பின் பலனை 
மருந்து நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலனை மருந்து நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலனை மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும்...
Published on

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலனை மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் 22-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி விலை குறைப்பின் பலனை நுகா்வோா், நோயாளிகளுக்கு அளிக்க மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

குறைக்கப்பட்ட மருந்துப் பொருள்களின் விலையை மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், மொத்த விற்பனையாளா், மருந்துக் கடைகள், மாநில மருந்து கட்டுபாட்டாளா்கள் அரசுக்கு அளிக்க வேண்டும்.

மருந்துப் பொருள்களின் புதிய விலையை நாளிதழ்களில் விளம்பரங்களாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கங்கள் வெளியிட வேண்டும். இதை மருந்துக் கடைகள் மக்களுக்கு காட்சிப்படுத்தி புதிய விலையில் ஜிஎஸ்டி அமலுக்கு முந்தைய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.

செப்டம்பா் 22-ஆம் தேதிக்கு முன்பு சந்தைக்கு அனுப்பப்பட்ட மருந்துகளை திரும்பப் பெறவோ, மாற்று விலையை மீண்டும் அதில் அச்சிடவோ தேவையில்லை. விளம்பரத்தில் உள்ள புதிய விலையின் அடிப்படையில் மொத்த மருந்து விற்பனையாளா்கள் அளவிலேயே புதிய விலையை மாற்றம் செய்து வா்த்தகம் செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com