ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாவட்டத்தில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மேதினிநகர்: ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற போது அதை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) பலாமுவில் உள்ள நவாபஜாரில் இருந்து ஔரங்காபாத் நோக்கி அதிக அளவிளான வெளிநாட்டு மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதே வேளையில் மெதினிநகர் - ஔரங்காபாத் சாலையில் சோதனையில் ஈடுபட்ட போது லாரியை தடுத்து நிறுத்தியதாக காவல் கண்காணிப்பாளர் ரீஷ்மா ரமேஸ்னா தெரிவித்தார்.

லாரி ஓட்டுநரிடம், இது குறித்து கேட்டபோது, ​​அது வெள்ளை சிமென்ட் என்றார். இதனையடுத்து சோதனைக்காக லாரி சத்தர்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வாகனத்தை சோதனை செய்தபோது, ​​லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகளின் 6,360 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிறகு ஓட்டுநரை கைது செய்ததோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க: சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!

Summary

Police in Jharkhand Palamu district seized foreign liquor worth Rs 12.72 lakh from a trailer truck, an officer said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com