நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை
Published on

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடியில் டென்டரை அறிவித்துள்ளது. அதில், ‘நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி விடியோ கண்காணிப்புடன் கூடி மின்வேலி அமைக்கப்பட வேண்டும். நுழைவாயில்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

கண்ணாடி இழை அடிப்படையிலான கண்காணிப்பு திட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நான்கு மாதங்களில் இந்தப் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஊடுருவ முயன்ற 20 வயதான நபரை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com